ADDED : ஜூலை 15, 2024 02:28 AM
பெ.நா.பாளையம்;பெரியதடாகம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
தடாகம் எஸ்.ஐ., ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் மாங்கரை ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பெரிய தடாகம் பிரிவு அருகே கையில் ஒரு பையுடன் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் விற்பனைக்காக ஒரு கிலோ, 100 கிராம் எடையுள்ள கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள், மதுரை, பெருங்குடியைச் சேர்ந்த பிரவீன் குமார், 22, தடாகத்தைச் சேர்ந்த கருப்பு ராஜா, 24, என, தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.