/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு வருவாய்த்துறை அதிகாரி நியமனம் மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு வருவாய்த்துறை அதிகாரி நியமனம்
மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு வருவாய்த்துறை அதிகாரி நியமனம்
மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு வருவாய்த்துறை அதிகாரி நியமனம்
மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு வருவாய்த்துறை அதிகாரி நியமனம்
ADDED : ஜூலை 18, 2024 12:18 AM
கோவை : கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனராக, திருச்சியில் தாசில்தாராக பணியாற்றிய முத்துசாமி, வருவாய்த்துறையில் இருந்து அயல் பணியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில், மத்திய மண்டலம் மற்றும் வடக்கு மண்டலங்களில் நகராட்சிகளில் இருந்து இட மாறுதல் பெற்று வந்தவர்கள் உதவி கமிஷனர்களாக உள்ளனர்.
கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் வருவாய்த்துறையில் துணை கலெக்டர்களாக பணிபுரிபவர்கள், அயல் பணி அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். தெற்கு மண்டல உதவி கமிஷனர் பணியிடம் காலியாக இருக்கிறது. பொறியியல் பிரிவில் நிர்வாக பொறியாளராக இருப்பவர், கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
இதில், கிழக்கு மண்டல உதவி கமிஷனர் கவிதாவை, உதவி கமிஷனர் பொறுப்பில் இருந்து கமிஷனர் சிவகுரு பிரபாகரன் விடுவித்தார்.
இதைத்தொடர்ந்து, திருச்சியில் தாசில்தாராக பணிபுரிந்த முத்துசாமி, வருவாய்த்துறையில் இருந்து அயல் பணியாக, மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு, அரசாணை எண்: 152க்கு மாறாக, வருவாய்த்துறையில் இருந்து துணை கலெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகளை உதவி கமிஷனர்களாக நியமிக்க, தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளர் சங்கத்தினர், தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், பழைய அரசாணையை சுட்டிக் காட்டி, வருவாய்த்துறையினர் நியமிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, மாநகராட்சியில் நிர்வாக அலுவலர்களாக பணிபுரிவோருக்கு உதவி கமிஷனர் பதவி உயர்வு கிடைக்காமல், பறிபோவதாக வருத்தப்படுகின்றனர்.