/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புதுச்சேரியில் இருந்து பஸ்சில் புறப்பட்டவரின் பணம் மாயம் புதுச்சேரியில் இருந்து பஸ்சில் புறப்பட்டவரின் பணம் மாயம்
புதுச்சேரியில் இருந்து பஸ்சில் புறப்பட்டவரின் பணம் மாயம்
புதுச்சேரியில் இருந்து பஸ்சில் புறப்பட்டவரின் பணம் மாயம்
புதுச்சேரியில் இருந்து பஸ்சில் புறப்பட்டவரின் பணம் மாயம்
ADDED : ஜூலை 18, 2024 12:18 AM
கோவை : புதுச்சேரியில் இருந்து தனியார் பஸ்சில் புறப்பட்ட வாலிபரிடம் இருந்து, ரூ.50 ஆயிரம் திருடிச்சென்றவரை, போலீசார் தேடுகின்றனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்தவர் அஜித்,29. இவர் கடந்த, 10ம் தேதி இரவு, 9:00 மணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன், புதுச்சேரியில் இருந்து கோவைக்கு தனியார் பஸ்சில் புறப்பட்டுள்ளார்.
மறுநாள் காலை, 4:45 மணிக்கு காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்தபோது, பணப்பையில் இருந்து ரூ.50 ஆயிரம் காணாமல் போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். காட்டூர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடந்து வருகிறது.