/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உக்கடம் பெரிய குளத்துக்கு இன்னும் மழை நீர் வரவில்லை: சேத்துமா வாய்க்காலில் ஆகாய தாமரையால் அடைப்பு உக்கடம் பெரிய குளத்துக்கு இன்னும் மழை நீர் வரவில்லை: சேத்துமா வாய்க்காலில் ஆகாய தாமரையால் அடைப்பு
உக்கடம் பெரிய குளத்துக்கு இன்னும் மழை நீர் வரவில்லை: சேத்துமா வாய்க்காலில் ஆகாய தாமரையால் அடைப்பு
உக்கடம் பெரிய குளத்துக்கு இன்னும் மழை நீர் வரவில்லை: சேத்துமா வாய்க்காலில் ஆகாய தாமரையால் அடைப்பு
உக்கடம் பெரிய குளத்துக்கு இன்னும் மழை நீர் வரவில்லை: சேத்துமா வாய்க்காலில் ஆகாய தாமரையால் அடைப்பு
ADDED : ஜூலை 18, 2024 12:18 AM

கோவை : ஆண்டிபாளையம் பிரிவில் மதகுகள் திறக்கப்பட்டு இருந்தாலும், ஆகாய தாமரையால் சேத்துமா வாய்க்கால் புதர்மண்டிக் கிடப்பதால், உக்கடம் பெரிய குளத்துக்கு மழை நீர் இன்னும் வந்தடையவில்லை.
கோவை புறநகர் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில், சில நாட்களாக நல்ல மழைப்பொழிவு காணப்படுகிறது.
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
உக்குளம், புதுக்குளம், கோளராம்பதி குளங்கள் நிரம்பியுள்ளன. பேரூர் சுண்டக்காமுத்துார் குளத்தில் முழுமையாக தண்ணீர் தேக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால், ஆற்றில் இருந்து திருப்பி விடப்பட்டிருக்கிறது.
குறிச்சி குளத்தில், 90 சதவீதத்துக்கு தண்ணீர் தேக்கப்பட்டு உள்ளதால், வெள்ளலுார் குளத்துக்கு அனுப்பப்படுகிறது. கோவையை கடந்து திருப்பூரை நொய்யல் சென்றடைந்துள்ளது.
ஆனால், கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, முத்தண்ணன், செல்வ சிந்தாமணி, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், சிங்காநல்லுார் ஆகிய ஏழு குளங்களுக்கு, மழை நீர் வந்தடையவில்லை.
நாகராஜபுரம் பகுதியில் வாய்க்கால் குறுக்கே பாலம் அகலப்படுத்தும் பணி நடப்பதால், கிருஷ்ணாம்பதி உள்ளிட்ட குளங்களுக்கு, நீர்வரத்து தடைபட்டுள்ளது.
பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க, நெடுஞ்சாலைத்துறையினருக்கு மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத் தியுள்ளார். உக்கடம் பெரிய குளத்துக்கு நீர் கொண்டு வரப்படும், சேத்துமா வாய்க்காலில் ஆண்டிபாளையம் பிரிவு மதகு இரண்டு மறை திறக்கப்பட்டு, குடியிருப்புகளுக்குள் புகாத அளவுக்கு, தண்ணீர் அளவாக திறந்து விடப்பட்டு இருக்கிறது.
சேத்துமா வாய்க்காலில், ஆகாய தாமரை படர்ந்து புதர்மண்டி இருக்கிறது. இப்பகுதியை, மாநகராட்சி பொறியியல் பிரிவினர் துார்வாராமல் விட்டு விட்டனர். மதகு திறக்கப்பட்டு தண்ணீர் வந்தபோதும், உக்கடம் பெரிய குளத்துக்கு சென்றடையாமல் தேங்கி நிற்கிறது.
சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்புகளில் இருந்து, வெளியேற்றப்படும் கழிவு நீரே குளத்துக்குச் செல்கிறது. அதேநேரம், புட்டுவிக்கி பாலத்தை கடந்து நொய்யல் ஆற்றில் இரு கரையை தொட்டு வெள்ளம் செல்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து, சேத்துமா வாய்க்காலை துார்வாரி, உக்கடம் பெரிய குளத்துக்கு மழை நீர் கொண்டு வர, நடவடிக்கை எடுக்க வேண்டும்.