/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 05, 2024 08:36 PM
கோவை : கோவை அரசு கலைக் கல்லூரியில் 2021 --- 2024 முதல் பயின்று, தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
அரசு கலைக் கல்லூரியில் 2021 முதல் 2024 வரை பயின்ற, மூன்றாம் ஆண்டு இளநிலை மாணவ, மாணவிகள் ஆறாம் பருவத்தில் மற்றும் 2022 முதல் 2024ல் பயின்ற இரண்டாம் ஆண்டு முதுநிலை மாணவர்கள், நான்காம் பருவத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற தவறியிருந்தால், சிறப்பு உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இளநிலை மாணவர்கள் 600 ரூபாயும், முதுநிலை மாணவர்கள் 900 ரூபாயும், யூகோ வங்கியில் 1612 என்ற வங்கிக் கணக்கில் செலுத்தி, தேர்வு நெறியாளர் அலுவலகத்தில் உரிய விண்ணப்பத்தை ஜூன் 18, மாலை 4:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சிறப்பு துணைத் தேர்வு, ஜூன் 22ம் தேதி முற்பகல் நடைபெறும் என, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.