/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குப்பையில் குப்பை தொட்டி மாற்றியமைக்க வலியுறுத்தல் குப்பையில் குப்பை தொட்டி மாற்றியமைக்க வலியுறுத்தல்
குப்பையில் குப்பை தொட்டி மாற்றியமைக்க வலியுறுத்தல்
குப்பையில் குப்பை தொட்டி மாற்றியமைக்க வலியுறுத்தல்
குப்பையில் குப்பை தொட்டி மாற்றியமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 05, 2024 08:37 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, நெ.10 முத்தூர் ஊராட்சியில் உள்ள பெரும்பாலான குப்பை தொட்டிகள் சேதமடைந்துள்ளது.
கிணத்துக்கடவு, நெ.10 முத்தூர் ஊராட்சியில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பையை, ஊராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
மேலும், ஊராட்சியின் முக்கிய இடங்களில் ஆங்காங்கே குப்பை கொட்ட வசதியாக குப்பை தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த குப்பை தொட்டிகளில் பெரும்பாலானவைகள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதில், கொட்டப்படும் குப்பை பெரும்பாலும் கீழே தான் சிதறி கிடக்கிறது. இதனால், துாய்மை பணியாளர்களுக்கு குப்பை அகற்றும் பணி இரட்டிப்பாகி விடுகிறது.
இது மட்டுமின்றி, திறந்தவெளியில் குப்பை இருப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குப்பையும் காற்றுக்கு பரவிகிடக்கிறது.
ஊராட்சி நிர்வாகம் சார்பில், மக்கள் நலன் கருதி சேதம் அடைந்த குப்பை தொட்டிகளுக்கு பதில் புதிதாக மாற்றியமைக்க வேண்டும், என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில், சேதமடைந்த குப்பை தொட்டிகளை மாற்றியமைக்க வேண்டும் என, பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், ஊராட்சி சார்பில் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கிராமத்தில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது,' என்றனர்.