/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அகில இந்திய கூடைப்பந்து துவக்கம்; முதல் போட்டியில் கேரளா வெற்றி அகில இந்திய கூடைப்பந்து துவக்கம்; முதல் போட்டியில் கேரளா வெற்றி
அகில இந்திய கூடைப்பந்து துவக்கம்; முதல் போட்டியில் கேரளா வெற்றி
அகில இந்திய கூடைப்பந்து துவக்கம்; முதல் போட்டியில் கேரளா வெற்றி
அகில இந்திய கூடைப்பந்து துவக்கம்; முதல் போட்டியில் கேரளா வெற்றி
ADDED : ஜூன் 05, 2024 08:36 PM

கோவை : அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி, நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மாவட்ட கூடைப்பந்து கழக மைதானத்தில், நேற்று துவங்கியது.
கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில், ஆண்களுக்கான 57வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் பெண்களுக்கான 21வது சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் கோப்பை நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள, மாவட்ட கூடைப்பந்து மைதானத்தில் நேற்று துவங்கி வரும், 9ம் தேதி வரை நடக்கிறது.
இதன் ஆண்கள் பிரிவில், கேரள மாநில மன்சார வாரியம், வருமான வரித்துறை, மத்திய செயலகம், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம், இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, உ.பி., போலீஸ், லயோலா மற்றும் பெண்கள் பிரிவில், கேரள மாநில மின்சார வாரியம், சவுத் சென்ட்ரல் ரயில்வே, மேற்கு ரயில்வே, கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம், கிழக்கு ரயில்வே, சென்ட்ரல் ரயில்வே தெற்கு ரயில்வே, சென்னை ரைசிங் ஸ்டார் அணிகள் பங்கேற்றுள்ளன.
போட்டியை, சக்தி சுகர்ஸ் நிறுவன தலைவர் மாணிக்கம், சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் நிர்வாக இயக்குனர் செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடக்கும், இப்போட்டியின் பெண்கள் பிரிவு முதல் லீக் போட்டியில், கேரள மாநில மின்சார வாரிய அணி, 99 - 42 என்ற புள்ளிக்கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை வீழ்த்தியது.