Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அகில இந்திய கூடைப்பந்து வரும் 5ம் தேதி துவங்குகிறது

அகில இந்திய கூடைப்பந்து வரும் 5ம் தேதி துவங்குகிறது

அகில இந்திய கூடைப்பந்து வரும் 5ம் தேதி துவங்குகிறது

அகில இந்திய கூடைப்பந்து வரும் 5ம் தேதி துவங்குகிறது

ADDED : ஜூன் 03, 2024 01:25 AM


Google News
கோவை;அகில இந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி, வரும் 5ம் தேதி துவங்குகிறது.

கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில், ஆண்களுக்கான 57வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் பெண்களுக்கான 21வது சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் கோப்பை, நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மாவட்ட கூடைப்பந்து மைதானத்தில் நடக்கிறது.

இதுகுறித்து, கோவை மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவர் செல்வராஜ் மற்றும் செயலாளர் பாலாஜி கூறியதாவது:-

கோவை மாவட்ட கூடைப்பந்து மைதானத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்துடன், கோவை மாநகராட்சி இணைந்து கூடைப்பந்து மைதானத்திற்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நடத்தப்படும், அகில இந்திய அளவிலான போட்டிகள் இந்தாண்டு வரும் 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடக்கிறது. இதில் இரு பிரிவுகளிலும், தலா எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர். என். மகாலிங்கம் கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூ.20 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

பெண்கள் பிரிவில், முதல் பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் சுழற் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகின்றன. பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us