/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேசிய தரவரிசை டென்னிஸ் போட்டியில் சிறுவர்கள் அசத்தல் தேசிய தரவரிசை டென்னிஸ் போட்டியில் சிறுவர்கள் அசத்தல்
தேசிய தரவரிசை டென்னிஸ் போட்டியில் சிறுவர்கள் அசத்தல்
தேசிய தரவரிசை டென்னிஸ் போட்டியில் சிறுவர்கள் அசத்தல்
தேசிய தரவரிசை டென்னிஸ் போட்டியில் சிறுவர்கள் அசத்தல்
ADDED : ஜூன் 03, 2024 01:25 AM
கோவை:காளப்பட்டியில் நடந்த தேசிய தரவரிசை டென்னிஸ் போட்டியில், சிறுவர்கள் அசத்தலாக விளையாடி பரிசுகளை வென்றனர்.
காளப்பட்டி ரோடு லிவோ டென்னிஸ் கிளப் சார்பில் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான, 'ஸ்ரீ எத்திராஜூலு நாயுடு நினைவு கோப்பைக்கான' தேசிய தரவரிசை டென்னிஸ் (ஏ.ஐ.டி.ஏ.,) போட்டி, லிவோ டென்னிஸ் மைதானத்தில் நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சிறுவர் - சிறுமியருக்கு ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறுவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், தமிழக வீரர் சித்தார்த் 2 - 0 என்ற செட் கணக்கில் தெய்வீகனை வீழ்த்தினார். இரட்டையர் பிரிவில் சித்தார்த் - அனிருத்வேல் ஜோடி 2 - 0 என்ற செட் கணக்கில் வேதாந்தன் - ஜியோகித் ஜோடியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தனர். சிறுமியர் ஒற்றையர் பிரிவில், கர்நாடகாவை சேர்ந்த இசிதா 2 - 0 என்ற செட் கணக்கில் தமிழகத்தின் அதிதியை வீழ்த்தி, முதலிடம் பிடித்தார்.
இரட்டையர் பிரிவில், இசிதா - அதிதி ஜோடி 2 - 0 என்ற செட் கணக்கில், ஆதிரை - இலக்கியா ஜோடியை வீழ்த்தி முதலிடம் பிடித்தனர்.