/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநில கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு முன்னேறிய கோவை மாவட்டம் மாநில கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு முன்னேறிய கோவை மாவட்டம்
மாநில கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு முன்னேறிய கோவை மாவட்டம்
மாநில கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு முன்னேறிய கோவை மாவட்டம்
மாநில கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு முன்னேறிய கோவை மாவட்டம்
ADDED : ஜூன் 03, 2024 01:26 AM

கோவை;மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் காலிறுதிப்போட்டியில், திருநெல்வேலி அணியை வீழ்த்தி, கோவை மாவட்ட அணி அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் காலிறுதிப்போட்டி, சென்னையில் கடந்த முதல் தேதி துவங்கியது. சென்னை ஒமேகா மைதானத்தில் நடந்த போட்டியில், கோவை மற்றும் திருநெல்வேலி அணிகள் மோதின.
இரண்டு நாள் டெஸ்ட் போட்டியான இதில், டாஸ் வென்ற திருநெல்வேலி அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கோவை அணியின் தஷிஷ் கண்ணன் (4 விக்கெட்), ஜோன்ஸ் (3 விக்கெட்) அபாரமாக பந்து வீச, திருநெல்வேலி அணி வீரர்கள் சரிந்தனர்.
அணிக்காக ஜெயந்த் (46), சக்திவேல் (36) நிதானமாக விளையாட, அந்த அணி முதல் இன்னிங்ஸில், 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய, கோவை அணியின் துவக்க வீரர் நவின் (157) சிறப்பான துவக்கம் அளித்தார். தொடர்ந்து பவன்ஸ்ரீ (106) சதம் விளாசினார். தஷிஷ் கண்ணன் (85) பொறுப்பாக விளையாடினார். கோவை அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 403 ரன்கள் குவித்தது.
பின்னர் இரண்டாம் இன்னிங்ஸை விளையாடிய திருநெல்வேலி அணி, இரண்டாம் நாள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 90 ரன்கள் எடுத்திருந்தது.
ஆட்டம் 'டிராவில்' முடிந்ததால், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில், கோவை அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.