/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவில்களில் ஆடி பவுர்ணமி சிறப்பு பூஜை கோவில்களில் ஆடி பவுர்ணமி சிறப்பு பூஜை
கோவில்களில் ஆடி பவுர்ணமி சிறப்பு பூஜை
கோவில்களில் ஆடி பவுர்ணமி சிறப்பு பூஜை
கோவில்களில் ஆடி பவுர்ணமி சிறப்பு பூஜை
ADDED : ஜூலை 22, 2024 03:11 AM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலையில் உள்ள கோவில்களில் ஆடி பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி அருகே தொண்டாமுத்துார் கமல காமாட்சியம்மன் கோவிலில், ஆடி பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, விளக்கு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஆடி பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இதுபோன்று,பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் ஆடி பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
உடுமலை
உடுமலை மலையாண்டிபட்டனம் உச்சிமாகாளியம்மன் கோவிலில், ஆடிமாதத்தையொட்டி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு தொடர்ந்து நடக்கிறது. நேற்று பவுர்ணமியையொட்டி அம்பாளுக்கு அபிேஷகத்துடன் சிறப்பு அலங்காரம் நடந்தது. சுவாமிக்கு தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
உடுமலை, மாரியம்மன் கோவில், சீனிவாசா வீதி உச்சிமாகாளியம்மன் கோவில், நேரு வீதி காமாட்சி அம்மன் கோவில், தளிரோடு, தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில் விசாலாட்சி அம்மன் கோவில்களிலும் பவுர்ணமி சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது.
பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* உடுமலை அருகே சின்னபொம்மன்சாளை செல்வமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மன் வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு வழங்கப்பட்டது.