/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நிரம்பி ததும்பும் சோலையாறு பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி நிரம்பி ததும்பும் சோலையாறு பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பி ததும்பும் சோலையாறு பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பி ததும்பும் சோலையாறு பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பி ததும்பும் சோலையாறு பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 22, 2024 03:09 AM
வால்பாறை;வால்பாறையில், தொடர் மழையின் காரணமாக, சோலையாறு அணை கடந்த 19ம் தேதி அதிகாலை நிரம்பியது. இதனை தொடர்ந்து சேடல் டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மழை நீடிக்கும் நிலையில், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 162.56 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 4,302 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது.
அணையிலிருந்து வினாடிக்கு, 4,735 கன அடி வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சோலையாறு அணை கடந்த 4 நாட்களாக நிரம்பிய நிலையில் காட்சியளிப்பதால் பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.