/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிரதான குழாய் உடைப்பு: சீரமைப்பு பணிகள் தீவிரம் பிரதான குழாய் உடைப்பு: சீரமைப்பு பணிகள் தீவிரம்
பிரதான குழாய் உடைப்பு: சீரமைப்பு பணிகள் தீவிரம்
பிரதான குழாய் உடைப்பு: சீரமைப்பு பணிகள் தீவிரம்
பிரதான குழாய் உடைப்பு: சீரமைப்பு பணிகள் தீவிரம்
ADDED : ஜூலை 22, 2024 03:12 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகே, நகராட்சி பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணானது.
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகே, நேற்று முன்தினம் மதியம், திடீரென ரோட்டில் ஊற்று போன்று நீர் பொங்கி ஓடியது. செம்மண் கலந்த நீர், ரவுண்டானாவையொட்டி அமைந்துள்ள ரோட்டை அரித்து சென்று, சப் - கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்தது.
ரோட்டில் திடீரென நீர் வெளியேறியதால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாயினர். நீர் வெளியேறிய பகுதியில், வாகனங்கள் சென்றதால் ரோடு உள்வாங்கியது. அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போலீசார், அவ்வழியில் வாகனங்கள் செல்லாமல் மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தினர்.இதையடுத்து தகவல் அறிந்த நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். போக்குவரத்து மாற்றம் செய்த நிலையில், குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மார்க்கெட் ரோடு நகராட்சி நீர்உந்து நிலையத்தில் இருந்து, மகாலிங்கபுரம், கே.ஆர்.ஜி.பி., நகர், சுதர்சன் நகர், சோமசுந்தரம் லே -- அவுட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு, பஸ் ஸ்டாண்ட் வழியாக பிரதான குழாய் செல்கிறது.குழாயில் ஏதாவது கசிவு ஏற்பட்டு உடைப்பு ஏற்பட்டு இருக்கலாம். உடனடியாக குடிநீர் நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு, கூறினர்.