/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 2 ஆண்டுகளில் 5 புதிய ரயில்கள்; தொழில் துறையினர் மகிழ்ச்சி! * பெங்களூரு, சென்னைக்கு கூடுதல் ரயில்கள் எதிர்பார்ப்பு 2 ஆண்டுகளில் 5 புதிய ரயில்கள்; தொழில் துறையினர் மகிழ்ச்சி! * பெங்களூரு, சென்னைக்கு கூடுதல் ரயில்கள் எதிர்பார்ப்பு
2 ஆண்டுகளில் 5 புதிய ரயில்கள்; தொழில் துறையினர் மகிழ்ச்சி! * பெங்களூரு, சென்னைக்கு கூடுதல் ரயில்கள் எதிர்பார்ப்பு
2 ஆண்டுகளில் 5 புதிய ரயில்கள்; தொழில் துறையினர் மகிழ்ச்சி! * பெங்களூரு, சென்னைக்கு கூடுதல் ரயில்கள் எதிர்பார்ப்பு
2 ஆண்டுகளில் 5 புதிய ரயில்கள்; தொழில் துறையினர் மகிழ்ச்சி! * பெங்களூரு, சென்னைக்கு கூடுதல் ரயில்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 18, 2024 11:25 PM
-நமது நிருபர்-
கோவையிலுள்ள தொழில் அமைப்புகளின் தொடர் முயற்சியால், கடந்த இரண்டு ஆண்டுகளில், ஐந்து புதிய ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
கோவை நகரின் வளர்ச்சி காரணமாக, பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், இங்கு பெருமளவில் குடியேறி வருகின்றனர். தங்கள் ஊர்களுக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்துக்கு ரயில்களையே அதிகளவில் எதிர்பார்க்கின்றனர். ஆனால் கோவையில் ரயில்வே கட்டமைப்புகள் குறைவாக இருப்பதால், ரயில்களை இயக்க மறுப்பது தொடர்கிறது.
குறிப்பாக, கோவை சந்திப்பை விரிவாக்கம் செய்து, கூடுதல் நடைமேடைகளையும், பராமரிப்புக்கான 'பிட் லைன்'களையும் அமைக்காமலிருப்பதால், புதிய ரயில்களை இயக்குவது தடைபட்டு வருகிறது. ஆனாலும் தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களில், சென்னைக்கு அடுத்து அதிக வருவாய் தரும் சந்திப்பாக கோவைதான் உள்ளது.
இருப்பினும், கோவையிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு, ரயில்கள் குறைவாக இருப்பதால், ஆம்னி பஸ்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்க வேண்டிய கட்டாயம் தொடர்கிறது. அதேபோல, தென் மாவட்டங்களுக்கான பழைய ரயில்கள் இன்னும் இயக்கப்படாததால், இங்குள்ள பல லட்சம் மக்கள், தங்கள் ஊர்களுக்குச் செல்வதற்கு அரசு பஸ்களையே நம்பியுள்ளனர்.
இதனால் ரயில்வே ஸ்டேஷன் மறு சீரமைப்பு, புதிய ரயில்கள் இயக்கம் ஆகிய கோரிக்கைகளை, இங்குள்ள தொழில் அமைப்புகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ரயில்வே அமைச்சர், ரயில்வே வாரியம் மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகளைச் சந்தித்து, மீண்டும் மீண்டும் மனுக்களைக் கொடுத்து வருகின்றனர்.
அமைப்புகளுக்கு ஆதரவாக, கோவையைச் சேர்ந்த பல்வேறு அரசியல்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் இந்த கோரிக்கைகளை ஆதரித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து மனுக்களைக் கொடுக்கின்றனர். இதற்கு படிப்படியாக பலனும் கிடைத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஐந்து புதிய ரயில் சேவைகள் இதனால் துவக்கப்பட்டுள்ளன.
கடந்த 2022 ஏப்.,23 ல், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை, பழனி, மதுரை வழியாக திருநெல்வேலிக்கு வாராந்திர ரயில் சேவை துவங்கியது. அதே ஆண்டு செப்., 1 லிரு்து மதுரை-கோவை-மதுரை தினசரி ரயில் சேவையும் துவக்கப்பட்டது. அதேபோல 2023 ஏப்.,8 ல், கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த டிச.,31 லிருந்து, கோவை-பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயி்ல் சேவையும் துவங்கி, அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வரிசையில், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை-பழனி-மதுரை-விருதுநகர் வழியாக துாத்துக்குடிக்கு வாராந்திர இரு முறை ரயில் சேவை ஜூலை 19 ல் (இன்று) துவங்கவுள்ளது.
இந்த ரயில்கள் அனைத்துமே வரவேற்பைப் பெற்றிருப்பதுடன், நல்ல வருவாயும் அளித்து வருவதால், கூடுதல் ரயில்களை கோவையிலிருந்து இயக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மிக முக்கியமாக, சென்னை எக்மோருக்கும், பெங்களூருக்கும் இரவு நேர ரயில்களையும், கோவை -ராமேஸ்வரம் இடையே தினசரி ரயிலையும் இயக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.