ADDED : ஜூலை 18, 2024 11:25 PM
கோவை;துடியலுார், தொப்பம்பட்டியை சேர்ந்தவர் நாகலிங்கம்,42. பி.இ., படிப்பு முடித்த இவர் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். இவருடைய 'வாட்ஸ் அப்' எண்ணிற்கு கடந்த மே 2ம் தேதி வந்த குறுந்தகவலில் 'நிறுவனத்தின் பங்குகளை வாங்கியும், விற்பனை செய்தும் அதிக லாபம் ஈட்டலாம்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை நம்பி கடந்த மே, 29 முதல் ஜூன், 21ம் தேதி வரை ஏழு தவணைகளில், குறிப்பிடப்பட்ட வங்கி கணக்குக்கு ரூ.10 லட்சம் அனுப்பியுள்ளார். ஆனால், குறுந்தகவலில் அளித்த வாக்குறுதியின்படி எந்த லாப தொகையும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நாகலிங்கம், மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க விசாரணை நடந்துவருகிறது.