/உள்ளூர் செய்திகள்/சென்னை/ துப்பாக்கியால் சுட்டு வாலிபர் தற்கொலை துப்பாக்கியால் சுட்டு வாலிபர் தற்கொலை
துப்பாக்கியால் சுட்டு வாலிபர் தற்கொலை
துப்பாக்கியால் சுட்டு வாலிபர் தற்கொலை
துப்பாக்கியால் சுட்டு வாலிபர் தற்கொலை
ADDED : மே 28, 2025 02:59 AM

சென்னை:சென்னை தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், 65. மனைவி தாரகேஸ்வரி. இவர், 'ஐஸ் யூனிட்' என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகன் பிரகலாத் நரசிம்மன், 32, தந்தையுடன் சேர்ந்து தொழிலை கவனித்து வருகிறார்.
கடந்த நான்கு மாதங்களாக, கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட பிரகலாத் நரசிம்மன், சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று தன் அறையில் இருந்த பிரகலாத் நரசிம்மன், துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாய் தாரகேஸ்வரி பாதுகாப்பிற்காக வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர் விசாரணை நடக்கிறது.