/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை வந்த ஆம்னி பஸ்சில் நெளிந்த பாம்பு சென்னை வந்த ஆம்னி பஸ்சில் நெளிந்த பாம்பு
சென்னை வந்த ஆம்னி பஸ்சில் நெளிந்த பாம்பு
சென்னை வந்த ஆம்னி பஸ்சில் நெளிந்த பாம்பு
சென்னை வந்த ஆம்னி பஸ்சில் நெளிந்த பாம்பு
ADDED : மே 28, 2025 12:24 AM

துரைப்பாக்கம் :ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி, நேற்று, ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்தது. ஓ.எம்.ஆர்., அருகே வந்தபோது, ஓட்டுனர் காலில் ஏதோ தட்டுப்படுவது போல் உணர்ந்தார். குனிந்து பார்த்தபோது, பாம்பு ஒன்று நெழிந்து கொண்டிருந்தது.
உடனே, சாலையோரம் பேருந்தை நிறுத்தி, அதில் இருந்து 30 பயணியரையும் ஊழியர்கள் கீழே இறக்கினர். தகவல் அறிந்து வந்த துரைப்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், 30 நிமிடம் போராடி, 5 அடி நீளம் கொண்ட பாம்பை பிடித்தனர். கொம்பேறி மூக்கன் பாம்பு என தெரிந்தது. இதேபோல, வேறு பாம்பு இருக்குமோ என, பஸ் முழுதும் தேடினர். பயணியரும், அவர்களின் உடைமைகளை கீழே எடுத்து பார்த்தனர். இல்லை என்றதும் நிம்மதி அடைந்தனர். தீயணைப்பு வீரர்கள், பாம்பை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் விட்டனர். ராமேஸ்வரத்தில் பேருந்தை நிறுத்தியபோது, பாம்பு ஏறி இருக்கலாம் என பேருந்து ஊழியர்கள் கூறினர்.