/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சீசன் முடிந்தும் தர்ப்பூசணி வரத்து அதிகரிப்பு சீசன் முடிந்தும் தர்ப்பூசணி வரத்து அதிகரிப்பு
சீசன் முடிந்தும் தர்ப்பூசணி வரத்து அதிகரிப்பு
சீசன் முடிந்தும் தர்ப்பூசணி வரத்து அதிகரிப்பு
சீசன் முடிந்தும் தர்ப்பூசணி வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூன் 13, 2025 12:21 AM

கோயம்பேடு, ஒவ்வொரு ஆண்டும் பிப்., மாதம் முதல் மார்ச் மாதம் வரை, திண்டிவனத்தில் இருந்து தர்ப்பூசணி வரத்து இருக்கும். பின் ஆந்திராவில் இருந்தும், ஜூன் முதல் தஞ்சாவூரில் இருந்தும் தர்ப்பூசணி வரத்து இருக்கும்.
அந்த வகையில், தஞ்சாவூரில் இருந்து தர்பூசணி, 50 டன் வரத்து உள்ளது. இதையடுத்து, கிலோ தர்ப்பூசணி 14 - 16 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'கோடை கால தர்ப்பூசணி சீசன் முடிந்துவிட்டது. எனினும், தஞ்சாவூரில் இருந்து தர்ப்பூசணி வரத்து அதிகமுள்ளது; இதில் அதிக இனிப்பு இருக்காது. இதன் சீசன் முடிந்ததும், ஜெய்ப்பூரில் இருந்து தர்பூசணி வரத்து இருக்கும்' என்றனர்.