/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மயிலாப்பூரில் விழுந்த சுற்றுச்சுவரை கட்டி தராமல் இழுத்தடிப்பதாக புகார் மயிலாப்பூரில் விழுந்த சுற்றுச்சுவரை கட்டி தராமல் இழுத்தடிப்பதாக புகார்
மயிலாப்பூரில் விழுந்த சுற்றுச்சுவரை கட்டி தராமல் இழுத்தடிப்பதாக புகார்
மயிலாப்பூரில் விழுந்த சுற்றுச்சுவரை கட்டி தராமல் இழுத்தடிப்பதாக புகார்
மயிலாப்பூரில் விழுந்த சுற்றுச்சுவரை கட்டி தராமல் இழுத்தடிப்பதாக புகார்
ADDED : ஜூன் 13, 2025 12:21 AM

சென்னை, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில், 88 காவலர்கள், 32 எஸ்.ஐ.,க்கள், 16 இன்ஸ்பெக்டர்கள் என, மொத்தம் 136 பேர் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
மூன்று மாதங்களுக்கு முன், காவலர் குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை மாநகராட்சியினர் மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள மரத்தை வெட்டியபோது, கிளை முறிந்து விழுந்ததில், காவலர் குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதுவரை, சுற்றுச்சுவரை சீரமைத்து தராமல், மாநகராட்சி அதிகாரிகள் காலம் தாழ்த்துகின்றனர்.
இதனால், இரவு நேரத்தில் காவலர் குடியிருப்பில் நிறுத்தப்படும் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருட்டு தொடர்ந்து நடப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே, சுற்றுச்சுவரை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காவலர் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.