/உள்ளூர் செய்திகள்/சென்னை/ எழும்பூர் நிலையம் மேம்பாட்டு பணி 9 ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம் எழும்பூர் நிலையம் மேம்பாட்டு பணி 9 ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்
எழும்பூர் நிலையம் மேம்பாட்டு பணி 9 ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்
எழும்பூர் நிலையம் மேம்பாட்டு பணி 9 ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்
எழும்பூர் நிலையம் மேம்பாட்டு பணி 9 ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்
ADDED : ஜூன் 13, 2025 12:22 AM
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணி நடக்க உள்ளதால், தேஜஸ் உட்பட ஒன்பது விரைவு ரயில்களின் புறப்படும் இடம் மாற்றப்பட்டு உள்ளது.
எழும்பூர் ரயில் நிலையம், 734.91 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணி, 2023 பிப்ரவரியில் துவங்கியது. கட்டிடத்தின் அடித்தளம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து, காந்தி இர்வின் சாலை, பூந்தமல்லி சாலைகளின் பக்கத்தில், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே, ரயில் நிலையத்தின் உட்பகுதிகளில் புதிய நடைமேம்பாலம், நடைமேடைகளில் பயணியருக்கான அடிப்படை வசதிகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால், இங்கிருந்து செல்லும் சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
★ எழும்பூர் - மதுரை தேஜஸ், எழும்பூர் - கொல்லம், எழும்பூர் - மன்னார்குடி, எழும்பூர் - திருச்செந்துார், எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில்கள், வரும் 20ம் தேதி முதல் ஆக., 18வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். மேற்கண்ட ஊர்களில் இருந்து புறப்பட்டு வரும் விரைவு ரயில்களும் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்
★ தாம்பரம் - தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் விரைவு ரயில் வரும் வரும் 20ம் தேதி முதல் ஆக., 4 வரை, சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்
★ எழும்பூர் - புதுச்சேரி பயணியர் ரயில் வரும் ஆக., 4 வரை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்
★ மதுரை - ராஜஸ்தான் மாநிலம், பிகானர் வாரந்திர விரைவு ரயில் வரும், 26ம் தேதி முதல் ஆக.,14வரை எழும்பூருக்கு பதிலாக கடற்கரையில் நின்று செல்லும்
★ மன்னார்குடி - ராஜஸ்தான் ஜோத்பூர் வாரந்திர விரைவு ரயில் வரும் 23ம் தேதி முதல் ஆக., 18 வரை எழும்பூருக்கு பதிலாக கடற்கரையில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
**