ADDED : ஜூன் 27, 2025 12:22 AM
ஓட்டேரி, ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட 'மாவா' எனும் போதை பொருட்கள் விற்கப்படுவதாக, ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட பகுதியில் நேற்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
இதில், ஒரு வீட்டில் இருந்து 3 கிலோ மாவா, 30 பாக்கெட் குட்கா, ஒரு மிக்ஸி உள்ளிட்டவை சிக்கியது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மாவா தயாரித்து விற்ற நைமுல்லாகான், 33, அவரது மனைவி ஆயிஷா, 28, மற்றும் வீட்டில் வேலை செய்த பட்டாளத்தைச் சேர்ந்த இலக்கியா, 34, ஆகிய மூவரை, போலீசார் கைது செய்தனர். இவர்கள், வீட்டிலேயே மாவா, ஜர்தா உள்ளிட்ட போதை வஸ்துகளை தயாரித்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில் விற்று வந்தது தெரிய வந்தது.