/உள்ளூர் செய்திகள்/சென்னை/ காரில் வலம் வந்து 'ஹான்ஸ்' விற்ற போரூர் நபர் சிக்கினார் காரில் வலம் வந்து 'ஹான்ஸ்' விற்ற போரூர் நபர் சிக்கினார்
காரில் வலம் வந்து 'ஹான்ஸ்' விற்ற போரூர் நபர் சிக்கினார்
காரில் வலம் வந்து 'ஹான்ஸ்' விற்ற போரூர் நபர் சிக்கினார்
காரில் வலம் வந்து 'ஹான்ஸ்' விற்ற போரூர் நபர் சிக்கினார்
ADDED : ஜூன் 27, 2025 12:23 AM

சென்னை, காரில் வைத்து, 'ஹான்ஸ்' உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்று வந்த போரூர் நபரை போலீசார் கைது செய்தனர்.
ஆயிரம்விளக்கு, கிரீம்ஸ் சாலையில் போலீசார் நேற்று மதியம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வைத்து தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து வந்த நபரை, கையும் களவுமாக பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில், போரூரைச் சேர்ந்த சதீஷ், 44, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், ஒன்றரை கிலோ 'ஹான்ஸ்' உள்ளிட்ட புகையிலைப் பொருட்களையும், விற்பனைக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
சிக்கியது எப்படி?
ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த எட்டியப்பன், 52, என்பவர், வழக்கமாக சதீஷிடம் 'ஹான்ஸ்' வாங்கி உபயோகித்து வந்துள்ளார். சமீபத்தில் வாங்கியபோது, எட்டியப்பனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சதீஷிடம் கேட்டபோது அவற்றில் போதைக்காக சில பொருட்களை கலந்ததாக கூறியுள்ளார்.
இது குறித்து, எட்டியப்பன் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், சதீஷ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.