/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருவள்ளூர் பிரீமியர் ஹாக்கி இந்தியன் வங்கி 'சாம்பியன்' திருவள்ளூர் பிரீமியர் ஹாக்கி இந்தியன் வங்கி 'சாம்பியன்'
திருவள்ளூர் பிரீமியர் ஹாக்கி இந்தியன் வங்கி 'சாம்பியன்'
திருவள்ளூர் பிரீமியர் ஹாக்கி இந்தியன் வங்கி 'சாம்பியன்'
திருவள்ளூர் பிரீமியர் ஹாக்கி இந்தியன் வங்கி 'சாம்பியன்'
ADDED : செப் 01, 2025 01:09 AM

சென்னை:திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி போட்டியில், இந்தியன் வங்கி அணி, 'சாம்பியன்' பட்டத்தை வென்றது.
டி.பி.எல்., எனும் திருவள்ளூர் பிரீமியர் ஹாக்கி லீக் போட்டி, எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், ஆக., 11ல் துவங்கி, நேற்று மாலை நிறைவடைந்தது. போட்டியில், வருமான வரி, மாஸ்கோ மேஜிக், இந்தியன் வங்கி, ஜி.எஸ்.டி., - இந்தியன் ஓவர்சிஸ் வங்கி உட்பட 10 அணிகள், இரு பிரிவாக மோதின.
அனைத்து 'லீக்' போட்டிகள் முடிவில், இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிகள், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
நேற்று மாலை நடந்த இறுதி போட்டியில், 4 - 3 என்ற கோல் கணக்கில், இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று, 'சாம்பியன்' கோப்பையை வென்று, 50,000 ரூபாய் பரிசு தொகையை வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு, சிறுபான்மையினர் நலத்துறையின் அமைச்சர் நாசர் பரிசுகளை வழங்கினார். நிகழ்வில், எழும்பூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பரந்தாமன், ஒலிம்பிக் வீரர் பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.