/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரேஸில் ஈடுபட்ட 4 பேர் கைது இரண்டு பைக்குகள் பறிமுதல் ரேஸில் ஈடுபட்ட 4 பேர் கைது இரண்டு பைக்குகள் பறிமுதல்
ரேஸில் ஈடுபட்ட 4 பேர் கைது இரண்டு பைக்குகள் பறிமுதல்
ரேஸில் ஈடுபட்ட 4 பேர் கைது இரண்டு பைக்குகள் பறிமுதல்
ரேஸில் ஈடுபட்ட 4 பேர் கைது இரண்டு பைக்குகள் பறிமுதல்
ADDED : செப் 01, 2025 01:09 AM

அம்பத்துார்:பைக் ரேஸில் ஈடுபட்ட நான்கு வாலிபர்களை கைது செய்த போலீசார், இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
அம்பத்துார் -- செங்குன்றம் பிரதான சாலையில், பள்ளி, கல்லுாரி மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதிக போக்குவரத்துள்ள இச்சாலையில், வாலிபர்கள் சிலர் பொதுமக்கள் மற்றும் சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 'பைக் ரேஸ்' நடத்தியுள்ளனர்.
மேலும், பெண்கள் மற்றும் முதியவர்கள் ஓட்டிச்செல்லும் ஸ்கூட்டர்களை இடிப்பதுபோல, பயமுறுத்தியபடி பைக்கை ஓட்டிச் சென்றனர். அதுமட்டுமல்லாமல், பைக்கின் முன் பின் சக்கரங்களை துாக்கி சாகசம் செய்வது உள்ளிட்ட, பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டு, வீடியோ பதிவு செய்ததுடன், அதை இணையத்தில் பதிவேற்றினர்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இதில், பைக் ரேஸில் ஈடுபட்டது தனியார் கல்லுாரி மாணவர்களான, அம்பத்துார், மாதனாங்குப்பத்தைச் சேர்ந்த தினேஷ், 18, சஞ்சய், 18, சஞ்சய், 20, மற்றும் விமல், 20, என தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்து, 'யமஹாஆர்15' மற்றும் யமஹா எம்.டி15' என இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.