/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முல்லை நகர் புது பேருந்து நிலையம் ஆறு மாதங்களுக்குள் திறக்க ஏற்பாடு முல்லை நகர் புது பேருந்து நிலையம் ஆறு மாதங்களுக்குள் திறக்க ஏற்பாடு
முல்லை நகர் புது பேருந்து நிலையம் ஆறு மாதங்களுக்குள் திறக்க ஏற்பாடு
முல்லை நகர் புது பேருந்து நிலையம் ஆறு மாதங்களுக்குள் திறக்க ஏற்பாடு
முல்லை நகர் புது பேருந்து நிலையம் ஆறு மாதங்களுக்குள் திறக்க ஏற்பாடு
ADDED : செப் 01, 2025 01:11 AM

வியாசர்பாடி:வியாசர்பாடி, முல்லை நகர் பேருந்து நிலையம், 6.60 கோடி ரூபாய் செலவில், புதுப்பொலிவு பெற்று வருகிறது.
வியாசர்பாடியில், முல்லை நகர் பேருந்து நிலையம் உள்ளது. 1.41 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பேருந்து நிலையத்தில் இருந்து, கோயம்பேடு, கொளத்துார், பெரம்பூர், செம்பியம், அகரம் மற்றும் மாதவரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இப்பகுதியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள், இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், முல்லை நகர் பேருந்து நிலையம் பராமரிப்பின்றியும், அடிப்படை வசதிகள், தார் சாலை பெயர்ந்து இன்றியும் படுமோசமான நிலைக்கு மாறியது.
இதையடுத்து, 6 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில், முல்லை நகரில் புது பேருந்து நிலையம் கட்ட சி.எம்.டி.ஏ., முடிவெடுத்தது. இதற்கான பணிகள் 2024 மார்ச் மாதம் துவக்கியது. 90 பேருந்துகள் வந்து செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆறு மாதத்திற்குள் பணிகள் முடிந்து, பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.