பழைய மின் மோட்டர் அறை செயல்படவில்லை
பழைய மின் மோட்டர் அறை செயல்படவில்லை
பழைய மின் மோட்டர் அறை செயல்படவில்லை
ADDED : செப் 01, 2025 01:07 AM

திருவொற்றியூர் மாணிக்கம் நகர் - அம்பேத்கர் நகர் இணைப்பு ரயில்வே சுரங்கப்பாதையில், சென்னை மாநகராட்சியின் பாலங்கள் துறை சார்பில், 1.5 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் நடப்பதால், மாணிக்கம் நகர், பழைய மின் மோட்டர் அறை செயல்படவில்லை.
அதனால், 3 குதிரை திறன் மின் மோட்டார் பயன்படுத்தி, மழைநீரை அப்புறப்படுத்தும் பணி நடந்ததால், காலை, 9:00 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஸ்கூட்டர், டூ - வீலர் உள்ளிட்ட வாகனங்களின், சைலன்சரில் தண்ணீர் புகுந்து பழுதாகின. மணலியில், சி.பி.சி.எல்., அருகேயுள்ள சுடுகாடு முழுதும் மழைநீர் தேங்கி குளம் காட்சியளித்தது.