Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 43 லட்சம் டன் குப்பை அகற்றி 97 ஏக்கர் நிலம் மீட்பு

43 லட்சம் டன் குப்பை அகற்றி 97 ஏக்கர் நிலம் மீட்பு

43 லட்சம் டன் குப்பை அகற்றி 97 ஏக்கர் நிலம் மீட்பு

43 லட்சம் டன் குப்பை அகற்றி 97 ஏக்கர் நிலம் மீட்பு

ADDED : செப் 01, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
சென்னை:பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்கில், 43.33 லட்சம் டன் குப்பை, 'பயோ மைனிங்' முறையில் அகற்றி, 97.29 ஏக்கர் இடம் மீட்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், தினமும் 6,300 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில், 1 முதல் 8 வரை மண்டலங்களில் உள்ள குப்பை கொடுங்கையூரிலும், 9 முதல் 15 வரை மண்டலங்களில் சேரும் குப்பை பெருங்குடியிலும் கொட்டப்பட்டு வருகின்றன.

மொத்தம் 250 ஏக்கர் பரப்பு கொண்ட பெருங்குடி குப்பை கிடங்கில், 225 ஏக்கர் பரப்பில் 27.50 லட்சம் டன் குப்பை சேர்ந்தது. மொத்தம் 342.91 ஏக்கர் பரப்பு கொண்ட கொடுங்கையூர் கிடங்கில், 252 ஏக்கர் பரப்பில் 66.52 லட்சம் டன் குப்பை சேர்ந்தது.

இவற்றை 'பயோ மைனிங்' முறையில் பிரித்தெடுத்து, நிலத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் மாநகராட்சி களமிறங்கியது.

பெருங்குடியில் 350.65 கோடி ரூபாயில் 2022ம் ஆண்டிலும், கொடுங்கையூரில் 641 கோடி ரூபாயிலும், 'பயோ மைனிங்' முறையில் குப்பையை அகழ்ந்தெடுத்து அகற்றும் பணி துவங்கியது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

பெருங்குடியில் 27.50 லட்சம் டன்னில், 25.30 லட்சம் டன் குப்பையை அகற்றி, 94.29 ஏக்கர் இடம் மீட்கப்பட்டது. மீதமுள்ள 2.20 லட்சம் டன் குப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் அகற்றப்படும்.

கொடுங்கையூரில் 66.52 லட்சம் டன் குப்பையில், 18 லட்சம் டன் குப்பையை அகற்றி, 3 ஏக்கர் இடம் மீட்கப்பட்டது. இதில், 57 லட்சம் ரூபாயில் வேலி அமைத்து, 1,500 பசுமை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மீதமுள்ள 48.52 லட்சம் டன் குப்பையை அகழ்ந்தெடுக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us