/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஓடிய காரில் திடீர் தீ எஸ்.எஸ்.ஐ., தப்பினார் ஓடிய காரில் திடீர் தீ எஸ்.எஸ்.ஐ., தப்பினார்
ஓடிய காரில் திடீர் தீ எஸ்.எஸ்.ஐ., தப்பினார்
ஓடிய காரில் திடீர் தீ எஸ்.எஸ்.ஐ., தப்பினார்
ஓடிய காரில் திடீர் தீ எஸ்.எஸ்.ஐ., தப்பினார்
ADDED : மே 31, 2025 02:37 AM
சென்னை,:புரசைவாக்கம் காவல் குடியிருப்பில் வசிப்பவர் மகேஸ்வரன், 54; வேப்பேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்.
நேற்று காலை, அவரது 'மாருதி' காரில், மாமனார் மற்றும் மாமியாரை எழும்பூர் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
வேப்பேரி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சர்ச் அருகே, காரின் முன்பக்கத்திலிருந்து கரும்புகை வெளியேறியது. காரை நிறுத்திய அவர் இறங்கியதும், தீ பற்றி கார் எரிந்தது. வேப்பேரி, கீழ்ப்பாக்கம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.