ADDED : மே 31, 2025 02:36 AM
சென்னை':எழும்பூர் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, நடைமேடைகளில் 45 மூட்டைகளில் 1,600 கிலோ ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது.
அவற்றை பறிமுதல் செய்து, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், ரயிலில் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 8,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.