Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தாம்பரம் - திருச்சி, நெல்லைக்கு ரம்ஜானுக்காக சிறப்பு ரயில்கள்

தாம்பரம் - திருச்சி, நெல்லைக்கு ரம்ஜானுக்காக சிறப்பு ரயில்கள்

தாம்பரம் - திருச்சி, நெல்லைக்கு ரம்ஜானுக்காக சிறப்பு ரயில்கள்

தாம்பரம் - திருச்சி, நெல்லைக்கு ரம்ஜானுக்காக சிறப்பு ரயில்கள்

ADDED : மார் 23, 2025 12:22 AM


Google News
சென்னை, ரம்ஜான் பண்டிகையொட்டி, தாம்பரத்தில் இருந்து திருச்சி மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:

★ தாம்பரத்தில் இருந்து, வரும் 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:00 மணிக்கு கன்னியாகுமரி செல்லும். கன்னியாகுமரியில் இருந்து, வரும் 31ல் இரவு 8:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:55 மணிக்கு தாம்பரம் வரும். செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக செல்லும்

★ திருச்சியில் இருந்து, வரும் 29, 31ம் தேதிகளில் அதிகாலை 5:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் பகல் 12:30 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து, மாலை 3:45 மணிக்கு புறப்பட்டு, அதேநாளில் இரவு 10:40 மணிக்கு திருச்சி செல்லும். செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக செல்லும். இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* கூடுதலாக 4 பெட்டி இணைப்பு

தாம்பரம் - மதுரை இடையே இயக்கப்படும் விரைவு ரயில்களில் நான்கு பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது.

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:

* மதுரை - தாம்பரம் இடையே வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலில், ஏப்., 26ம் தேதி வரை 3ம் வகுப்பு மூன்று 'ஏசி' பெட்டிகளும், ஒரு முன்பதிவு பெட்டியும் இணைத்து இயக்கப்படும்.

* தாம்பரம் - மதுரை இடையே வெள்ளி, ஞாயிறுகளில் இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலில் இன்று முதல் ஏப்., 27ம் தேதி வரை 3ம் வகுப்பு மூன்று ஏசி பெட்டிகளும், ஒரு முன்பதிவு பெட்டியும் இணைத்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us