/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மதுக்கூடத்தில் மாமூல் கேட்டு பாட்டில் வீசி தாக்கிய ரவுடி கைது மதுக்கூடத்தில் மாமூல் கேட்டு பாட்டில் வீசி தாக்கிய ரவுடி கைது
மதுக்கூடத்தில் மாமூல் கேட்டு பாட்டில் வீசி தாக்கிய ரவுடி கைது
மதுக்கூடத்தில் மாமூல் கேட்டு பாட்டில் வீசி தாக்கிய ரவுடி கைது
மதுக்கூடத்தில் மாமூல் கேட்டு பாட்டில் வீசி தாக்கிய ரவுடி கைது
ADDED : ஜூன் 13, 2025 12:26 AM

பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையில், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள 'டாஸ்மாக்' கடை அருகே உள்ள மதுக்கூடத்தை நடத்தி வருபவர் ஹரிகிருஷ்ணன், 40.
இங்கு, பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையைச் சேர்ந்த யுவனேஸ்வரன், 22, என்ற ரவுடி, அடிக்கடி சென்று தகராறு செய்தும், மாமூல் கேட்டும் ரவுடியிசம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மதுக்கூடத்திற்கு சென்ற யுவனேஸ்வரன், வழக்கம்போல், மாமூல் கேட்டு தகராறு செய்து, காலி பாட்டில்களை எடுத்து மதுக்கூட ஊழியர்கள் மீது வீசியுள்ளார். இது குறித்து ஹரிகிருஷ்ணன், யுவனேஸ்வரனை தட்டிக் கேட்ட நிலையில், அவரையும் தாக்கியுள்ளார். பதிலுக்கு ஹரிகிருஷ்ணனும், யுவனேஸ்வரனை தாக்கியுள்ளார். இதையடுத்து ஹரிகிருஷ்ணன் அளித்த புகாரின்படி, செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவனேஸ்வரனை கைது செய்தனர்.
இதில் யுவனேஸ்வரன் மீது ஏற்கனவே 12 குற்ற வழக்குகள் உள்ளன.