/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரயில் நிலையங்களில் கூடுதலாக 300 கேமரா அமைக்க பரிந்துரை ரயில் நிலையங்களில் கூடுதலாக 300 கேமரா அமைக்க பரிந்துரை
ரயில் நிலையங்களில் கூடுதலாக 300 கேமரா அமைக்க பரிந்துரை
ரயில் நிலையங்களில் கூடுதலாக 300 கேமரா அமைக்க பரிந்துரை
ரயில் நிலையங்களில் கூடுதலாக 300 கேமரா அமைக்க பரிந்துரை
ADDED : ஜூன் 02, 2025 04:10 AM
சென்னை:சென்னையில், ரயில் நிலையங்களுக்கு பயணியர் போர்வையில் வரும் சிலர், கடத்தல், மொபைல் போன், நகை திருட்டுகளில் ஈடுபடுகின்றனர்.
எனவே, பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியை அதிகரித்துள்ளனர்.
ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
கஞ்சா, குழந்தை கடத்தல், மொபைல்போன், நகை திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல் சம்பவங்களில் ஈடுபடுவோரை விரைந்து பிடிக்க, சிசிடிவி கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் 90 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தியுள்ளோம். எழும்பூரிலும் 50க்கும் மேற்பட்ட கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன. எனினும், கூடுதல் கேமராக்களை பொருத்த வேண்டியுள்ளது.
எனவே, எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில், 300 'சிசிடிவி' கேமராக்களை பொருத்த வேண்டும் என, தெற்கு ரயில்வேக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
நடைமேடைகளின் கடைசி பகுதிகள், பார்சல் அலுவலகம் மற்றும் ரயில் நிலையங்களின் வெளிப்புற பகுதிகளை தேர்வு செய்து, பட்டியல் வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.