/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குப்பை கிடங்கான சுடுகாடு தீயிட்டு எரிப்பதால் அவதி குப்பை கிடங்கான சுடுகாடு தீயிட்டு எரிப்பதால் அவதி
குப்பை கிடங்கான சுடுகாடு தீயிட்டு எரிப்பதால் அவதி
குப்பை கிடங்கான சுடுகாடு தீயிட்டு எரிப்பதால் அவதி
குப்பை கிடங்கான சுடுகாடு தீயிட்டு எரிப்பதால் அவதி
ADDED : ஜூன் 02, 2025 04:12 AM

அய்யப்பன்தாங்கல்:பரணிபுத்துார் பிரதான சாலை செந்தமிழ் நகர் அருகே, சுடுகாடு மற்றும் காலி மனை உள்ளது. இங்கு, குப்பை கொட்டி குவிக்கப்படுகிறது.
இந்த குப்பை கழிவுகளை, அவ்வப்போது தீயிட்டு எரிப்பதால், அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை பலரும், மூச்சுத்திணறலால் அவதியடைகின்றனர்.
மழைக்காலத்தில், குப்பையுடன் கழிவுநீர் கலந்து வீசும் துர்நாற்றத்தால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இதுகுறித்து சில ஆண்டுகளுக்கு முன் நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, குப்பை அகற்றப்பட்டு, சுற்றிலும் இரும்பு ஷீட்டால் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், அதே இடத்தில் மீண்டும் குப்பை கொட்டி எரிக்கப்படுகிறது. இதை ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கவில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.