Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆலந்துார் அரசு கல்லுாரியில் சேர்க்கைக்கான கலந்தாய்வு

ஆலந்துார் அரசு கல்லுாரியில் சேர்க்கைக்கான கலந்தாய்வு

ஆலந்துார் அரசு கல்லுாரியில் சேர்க்கைக்கான கலந்தாய்வு

ஆலந்துார் அரசு கல்லுாரியில் சேர்க்கைக்கான கலந்தாய்வு

ADDED : ஜூன் 02, 2025 04:20 AM


Google News
ஆலந்துார்:ஆலந்துாரில் புதிதாகஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சமீபத்தில் துவக்கப்பட்டது.

இக்கல்லுாரிக்கு புதிய கட்டடங்கள் கட்டும் வரை, தற்காலிகமாக நங்கநல்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு, பி.எஸ்சி., கணினி அறிவியல்-, பி.எஸ்சி., -உளவியல்-, பி.காம்., -வணிகவியல் - பொது, பி.பி.ஏ., -வணிக நிர்வாகவியல், பி.ஏ-., அரசியல் அறிவியல் ஆகிய ஐந்து பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன.

ஐந்து பாடப் பிரிவுகளுக்கும், 280 இடங்கள் உள்ளன. இதுவரை, 'ஆன்-லைன்' வாயிலாக, 24,391 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.

விண்ணப்பித்த மாணவர்களுக்கு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு முறையில் கலந்தாய்வு வாயிலாக இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இந்த கலந்தாய்வு, இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்டமாக, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், பாதுகாப்புப்படை வீரர்களின் வாரிசுகள், அந்தமான் - -நிக்கோபார் வாழ் தமிழர்கள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் என, சிறப்பு பிரிவினருக்கு நாளை நடக்கிறது.

பொதுப் பிரிவினருக்கு, வரும் 4ம் தேதி முதல் நங்கநல்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

கலந்தாய்வுக்கு தேர்வுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு, தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய சான்றிதழ்களுடனும், பெற்றோருடனும் வந்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என, கல்லுாரி முதல்வர் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us