ADDED : ஜூன் 14, 2025 01:47 AM

சென்னை,:வடபழனியில் இருந்து பிராட்வே பேருந்து நிலையத்திற்கு, வழித்தடம் எண் '26பி' பேருந்து இயக்கப்படுகிறது. கடந்த 12ம் தேதி மாலை இப்பேருந்தை, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுனர் வேல்முருகன், 41, இயக்கினார். அண்ணா மேம்பால பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்தில் ஏறிய நபர் டிக்கெட் எடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஐ.ஓ.பி., பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.
ஆத்திரமடைந்தவர் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டதுடன், கல்லை எடுத்து பேருந்தில் வீசி தப்பி சென்றார். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இது குறித்து விசாரித்த ஆயிரம்விளக்கு போலீசார், பேருந்து கண்ணாடியை உடைத்த, செம்மஞ்சேரியைச் சேர்ந்த காளிதாசன், 35, என்பவரை, நேற்று கைது செய்தனர்.