ADDED : ஜூன் 14, 2025 01:44 AM
கோயம்பேடு:திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் அபில்மியா, 28. இவரது மனைவி கஜிஜூலி அக்தர், 26. இவர்கள், மேடவாக்கத்தில் வசித்து வருகின்றனர்.
கடந்த 11ம் தேதி கஜிஜூலி அக்தர், தன் அண்ணன் ஜோசிம் மற்றும் அவரது மனைவி ஜோயா அக்தர் ஆகியோருடன், நெற்குன்றத்தில் உள்ள உறவினர் தாசு அக்தர் வீட்டிற்கு சென்றார்.
அப்போது, இவர்களுக்கு தெரிந்த இம்ரான் என்பவர் ஜோயா அக்தர் மற்றும் கஜிஜூலி அக்தரை, கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து, காரில் கடத்தி சென்றார்.
கஜிஜூலி அக்தர் மற்றும் ஜோயா அக்தர் தண்ணீர் வேண்டும் எனக்கூறி, காரில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பி, கோயம்பேடு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தனர்.
விசாரித்த போலீசார், திருவல்லிக்கேணி, ஜாம்பஜாரை சேர்ந்த இம்ரான், 24, மற்றும் மணி, 30, ஆகிய இருவரை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.