ADDED : ஜூன் 14, 2025 01:49 AM

சென்னை:ஆயிரம்விளக்கு ஆய்வாளர் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு மூவர், அரசால் தடைசெய்யப்பட்ட இ - சிகரெட்டுகளை நடைபாதையில் வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மூவரையும் கையும் களவுமாக பிடித்துச் சென்ற போலீசார், காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.
இதில், திருவான்மியூரைச் சேர்ந்த தீபக், 22, வரதன், 23, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முகமது நசீப், 35, ஆகியோர் என்பதும், தடை செய்யப்பட் இ - சிகரெட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
மூவரையும் கைது செய்த போலீசார், 295 இ - சிகரெட்டுகள், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 15,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.