/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பாரில் தகராறில் ஈடுபட்ட இருவருக்கு 'குண்டாஸ்' பாரில் தகராறில் ஈடுபட்ட இருவருக்கு 'குண்டாஸ்'
பாரில் தகராறில் ஈடுபட்ட இருவருக்கு 'குண்டாஸ்'
பாரில் தகராறில் ஈடுபட்ட இருவருக்கு 'குண்டாஸ்'
பாரில் தகராறில் ஈடுபட்ட இருவருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஜூன் 11, 2025 01:27 AM
சென்னை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மதுக்கூடத்தில், கடந்த 22ம் தேதி, இரு தரப்பினருக்கு இடையே பயங்கர அடிதடி மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக, மதுக்கூடத்தின் மேலாளர் வெங்கட்குமார், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மோதலில் ஈடுபட்ட அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த பிரசாத், 33, கணேஷ்குமார், 42, தனசேகர், 29, அஜய்ரோகன், 36, நாகேந்திர சேதுபதி, 33, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நாகேந்திர சேதுபதி, பரமக்குடி காவல் நிலைய பழைய குற்றவாளி என்பது தெரியவந்தது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட அஜய்ரோகன் மற்றும் நாகேந்திர சேதுபதி ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், நேற்று நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.