/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் கைது பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் கைது
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் கைது
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் கைது
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் கைது
ADDED : ஜூன் 11, 2025 01:26 AM
சென்னை, கடந்த மாதம், 26ம் தேதி, ஓட்டேரியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்கிற விந்தியா, 23, என்ற திருநங்கையிடம் தவறாக நடக்க முயன்ற வழக்கில், தலைமறைவாக இருந்த புளியந்தோப்பு கே.எம்.கார்டன் பகுதியை சேர்ந்த சந்துரு, 20, என்ற நபரை, நேற்று புளியந்தோப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், ஓட்டேரி, சேமாத்தம்மன் காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 18. இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, ஓட்டேரி, சந்திரயோகி சமாதி தெரு வழியே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை வழிமறித்து தாக்கிய இருவர், வாட்ச், 1,000 ரூபாயை பிடுங்கிச் சென்றனர். இதுகுறித்து, சுரேஷ்குமார் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விசாரித்து, பெரம்பூர், ஏகாங்கிபுரம் பகுதியை சேர்ந்த கயூப், 19, என்பவரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய கமலேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
அதேபோல், பல்லவன் சாலை மாநகராட்சி பூங்கா அருகே, திரு.வி.க., நகர் போலீசார், நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் நின்ற நபரை பிடித்து சோதனை நடத்தினர்.
அவரிடம், அரை கிலோ மாவா, 80 பாக்கெட் குட்கா பொருட்கள் இருந்தன. அவரை, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், பெரம்பூர் மதுரை சாமி மடம் பகுதியை சேர்ந்த பாஷா, 55, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், நேற்று நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.