/உள்ளூர் செய்திகள்/சென்னை/ டி.ஜி.பி., பெயரில் மீண்டும் மோசடிக்கு முயன்ற கும்பல் டி.ஜி.பி., பெயரில் மீண்டும் மோசடிக்கு முயன்ற கும்பல்
டி.ஜி.பி., பெயரில் மீண்டும் மோசடிக்கு முயன்ற கும்பல்
டி.ஜி.பி., பெயரில் மீண்டும் மோசடிக்கு முயன்ற கும்பல்
டி.ஜி.பி., பெயரில் மீண்டும் மோசடிக்கு முயன்ற கும்பல்
ADDED : மே 22, 2025 12:08 AM
சென்னை டி.ஜி.பி., ரேங்க் ஐ.பி.எஸ்., அதிகாரி சந்தீப்ராய் ரத்தோட். அவர் தற்போது, செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் உயர் பயிற்சியக இயக்குநராக உள்ளார்.
அவரது பெயர் மற்றும் புகைப்படத்துடன், சைபர் குற்றவாளிகள் போலியாக முகநுால் கணக்கு துவங்கி உள்ளனர்.
இந்த கணக்கில் இருந்து, போலீஸ் உயர் அதிகாரிகள், அவரது நண்பர்கள், உறவினர்கள் என்று பலருக்கும், நட்பில் இணைய அழைப்பு கொடுத்து உள்ளனர். பண மோசடியில் ஈடுபட, சைபர் குற்றவாளிகள் திட்டமிட்டு வேலை செய்துள்ளனர்.
இதை பார்த்த நண்பர்கள் சிலர், சந்தீப் ராய் ரத்தோட்டிற்கு தகவல் தெரிவித்தனர். போலியாக அவரது பெயரில் சைபர் குற்றவாளிகள் துவங்கிய கணக்கை முடக்கும் நடவடிக்கையை, சந்தீப் ராய் ரத்தோட் எடுத்து வருகிறார்.
இதேபோல், ஏப்., 4ல், இதேபோல் சைபர் குற்றவாளிகள், ரத்தோட் பெயரில் மோசடியில் ஈடுபட முயன்றனர்.