/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சாலையை கடந்த வாலிபர் டூ - வீலர் மோதி பலி சாலையை கடந்த வாலிபர் டூ - வீலர் மோதி பலி
சாலையை கடந்த வாலிபர் டூ - வீலர் மோதி பலி
சாலையை கடந்த வாலிபர் டூ - வீலர் மோதி பலி
சாலையை கடந்த வாலிபர் டூ - வீலர் மோதி பலி
ADDED : மே 22, 2025 12:08 AM
மீனம்பாக்கம் சைதாப்பேட்டை, சுப்பிரமணி சாலையை சேர்ந்தவர் சுந்தரம், 45. இவர், 19ம் தேதி இரவு, புல்லட் இருசக்கர வாகனத்தில், சைதாப்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி புறப்பட்டார்.
மீனம்பாக்கம் அருகில் சென்றபோது, ஒரு வாலிபர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, சுந்தரம் சென்ற பைக் மோதி, அந்த வாலிபர் பலத்த காயமடைந்தார்.
உடனே, அங்கு நின்ற யோகேஷ் என்ற வாலிபர், காயமடைந்தவரை மீட்டு, அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார்.
காயமடைந்தவரிடம் விசாரித்தபோது, அவர் பெயர் ராஜேந்திரன், 30, என்பது தெரிந்தது. அதன்பின் சுயநினைவை இழந்ததால், முகவரி பற்றி தகவல் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பலியானார். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார், சுந்தரத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.