/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளி கட்டடங்கள் கட்ட ரூ.22 கோடியில் அடிக்கல் பள்ளி கட்டடங்கள் கட்ட ரூ.22 கோடியில் அடிக்கல்
பள்ளி கட்டடங்கள் கட்ட ரூ.22 கோடியில் அடிக்கல்
பள்ளி கட்டடங்கள் கட்ட ரூ.22 கோடியில் அடிக்கல்
பள்ளி கட்டடங்கள் கட்ட ரூ.22 கோடியில் அடிக்கல்
ADDED : மார் 23, 2025 12:23 AM
குன்றத்துார்,குன்றத்துார் ஒன்றியத்தில் குன்றத்துார், கோவூர், கொளப்பாக்கம் ஆகிய மேல்நிலைப் பள்ளிகள், அய்யப்பன்தாங்கல், மாடம்பாக்கம், மாங்காடு, பட்டூர், நல்லுார் ஆகிய உயர் நிலைப்பள்ளிகள் உள்ளன.
அதேபோல், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் தண்டலம் மேல்நிலைப் பள்ளி, காட்டரம்பாக்கம் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்கு, 21.86 கோடி ரூபாய் மதிப்பில், 78 வகுப்பறைகள், 3 அறிவியல் ஆய்வகங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, கோவூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில், நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
இதில், ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை, கோவூர் ஊராட்சி தலைவர் சுதாகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.