பேட்மின்டனில் 90 அணிகள் பங்கேற்பு
பேட்மின்டனில் 90 அணிகள் பங்கேற்பு
பேட்மின்டனில் 90 அணிகள் பங்கேற்பு
ADDED : மார் 23, 2025 12:23 AM
சென்னை, சென்னை, நீலாங்காரை 'அன்லீச்' பேட்மின்டன் அரங்கில், மாநில அளவில் பேட்மின்டன் போட்டி, இன்று நடக்கிறது.
'டீம் - 16' அமைப்பு சார்பில் தீ அல்டிமேட் பேட்மின்டன் ஷோ டவுன் என்ற தலைப்பில், மாவட்ட பேட்மின்டன் போட்டி, நீலாங்காரையில் இன்று நடக்கிறது.
இதில் சென்னை, திருச்சி உட்பட எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 230க்கும் அதிகமான வீரர், வீராங்கனையர் பங்கேற்கின்றனர். போட்டி, இரண்டு பிரிவுகளாக நடக்கிறது.
இதன், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 84 அணிகள்; கலப்பு இரட்டையர் பிரிவில் 42 அணிகள் என 90க்கும் அதிகமான அணிகள் போட்டியிடுகின்றன.
இந்தப் போட்டி 'நாக்-அவுட்' முறையில் நடப்பதால், அணிகள் இடையே கடும் போட்டி இருக்கும். இப்போட்டிகளில், தேசிய அளவிலான நட்சத்திர வீரர்கள் பங்கேற்கின்றனர்.