/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருவொற்றியூரில் 'கிளினிக்' நடத்திய போலி டாக்டர் கைது திருவொற்றியூரில் 'கிளினிக்' நடத்திய போலி டாக்டர் கைது
திருவொற்றியூரில் 'கிளினிக்' நடத்திய போலி டாக்டர் கைது
திருவொற்றியூரில் 'கிளினிக்' நடத்திய போலி டாக்டர் கைது
திருவொற்றியூரில் 'கிளினிக்' நடத்திய போலி டாக்டர் கைது
ADDED : செப் 21, 2025 01:47 AM
திருவொற்றியூர் :திருவொற்றியூரில், பிளஸ் 2 மட்டுமே படித்து மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர் 8வது தெருவைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு, 50. இவர், அதே பகுதியில், 'ஸ்ரீ பவானி பிரைமரி ஹெல்த் கேர்' என்ற பெயரில், கிளினிக் வைத்துள்ளார்.
இவர், மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்ப்பதாக, மருத்துவத் துறைக்கு புகார் சென்றுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் அம்பிகா, திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் மனோஜ் ஆகியோர் அடங்கிய குழு, நேற்று முன்தினம் கிளினிக்கில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வெங்கடேஸ்வரலு பிளஸ் 2 மட்டுமே படித்து, மருத்துவம் பார்ப்பது தெரிய வந்தது. இதையடுத்து கிளினிக்கிற்கு 'சீல்' வைத்த மருத்துவ அதிகாரிகள், சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வெங்கடேஸ்வரலுவை கைது செய்து, திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு, ஜாமினில் விடப்பட்டார். இவர், சில ஆண்டுகளுக்கு முன், போலி மருத்துவம் பார்த்து சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.