/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அகில இந்திய டென்னிஸ் சென்னை வீரர் சாம்பியன் அகில இந்திய டென்னிஸ் சென்னை வீரர் சாம்பியன்
அகில இந்திய டென்னிஸ் சென்னை வீரர் சாம்பியன்
அகில இந்திய டென்னிஸ் சென்னை வீரர் சாம்பியன்
அகில இந்திய டென்னிஸ் சென்னை வீரர் சாம்பியன்
ADDED : செப் 21, 2025 01:47 AM

சென்னை, சென்னையில் நடந்த அகில இந்திய டென்னிஸ் தொடரில், சென்னை வீரர் மனிஷ் சுரேஷ்குமார், ஒற்றையர் பிரிவில் 'சாம்பியன்' பட்டம் வென்றார்.
எம்.எம்.டென்னிஸ் அகாடமி சார்பில், ஆண்களுக்கான அகில இந்திய அளவில், என்.செல்லதுரை நினைவு கோப்பைக்கான போட்டி, முகப்பேரில் உள்ள எம்.எம்.டென்னிஸ் அகாடமியில் நடந்தது.
இந்திய அளவில் 100 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 32 வீரர்கள் தகுதி சுற்றில் வெற்றி பெற்று, பிரதான போட்டியில் மோதினர்.
இதன், ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டி, நேற்று நடந்தது. அதில், சென்னையைச் சேர்ந்தவர்களான மனிஷ் சுரேஷ்குமார் அங்கித் வெங்கட்ராமனுடன் மோதினார்.
விறுவிறுப்பான இப்போட்டியில், அசத்தலாக விளையாடிய மனிஷ் 6 - 2, 6 - 1 என்ற செட் கணக்கில், எதிர்த்து விளையாடிய அங்கித் வெங்கட்ராமனை வீழ்த்தி, 'சாம்பியன்' பட்டத்தை வென்றார்.