ADDED : செப் 21, 2025 01:46 AM
திருவேற்காடு, திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி அருகே, சாலையோரத்தில் உள்ள மழைநீர் வடிகால்வாயில், கழிவுநீர் அகற்றும் லாரி நேற்று, கழிவுநீரை வெளியேற்றியது.
தகவலறிந்து வந்த பூந்தமல்லி வருவாய் துறை அதிகாரிகள், கழிவுநீர் லாரியை வழிமறித்து, பறிமுதல் செய்தனர். திருவேற்காடு போலீசார், நுாம்பல் பகுதியைச் சேர்ந்த கழிவுநீர் லாரி ஓட்டுநர் ஹரிஷ், 22, என்பவரிடம் விசாரிக்கின்றனர். வடிகால்வாயில் விதிமீறி கழிவுநீர் கொட்டி லாரியின் உரிமம் ரத்து செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.