மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி
ADDED : ஜூன் 12, 2025 11:59 PM
சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 50. ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில், எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, மின்வடம் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராயப்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.