/உள்ளூர் செய்திகள்/சென்னை/இறைச்சிக்காக பசு மாடுகளை திருடிய 4 பேர் கும்பல் கைதுஇறைச்சிக்காக பசு மாடுகளை திருடிய 4 பேர் கும்பல் கைது
இறைச்சிக்காக பசு மாடுகளை திருடிய 4 பேர் கும்பல் கைது
இறைச்சிக்காக பசு மாடுகளை திருடிய 4 பேர் கும்பல் கைது
இறைச்சிக்காக பசு மாடுகளை திருடிய 4 பேர் கும்பல் கைது
ADDED : ஜூன் 12, 2025 11:58 PM
திருவேற்காடு, திருவேற்காடு பகுதியில், இறைச்சிக்காக பசுமாடுகளை திருடி வந்த, நான்கு பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இறைச்சிக்காக மாடுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வதாகவும், புகார் கொடுத்தால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
போலீசார் நடவடிக்கை எடுக்க மறுத்தால் போராட்டத்தில் ஈடபடுவோம் என, நவீன கால்நடை விவசாயிகள் சங்கத் தலைவர் சாந்தகுமார் கூறினார். இதுகுறித்து, நம் நாளிதழில், ஜூன் 6ல் விரிவான செய்தி வெளியானது.
இந்நிலையில், திருவேற்காடு பகுதிகளில் பசு மாடுகளை திருடிவந்த நான்கு பேர் கும்பலை, போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவேற்காடு, யாதவர் தெருவைச் சேர்ந்தவர் கலைவாணி, 45 ; பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம், அவரது வீட்டில் கட்டி வைக்கப்பட்டு இருந்த பசு மாட்டை மர்ம நபர்கள் ஆட்டோவில் திருடி சென்றனர்.
தகவலறிந்த திருவேற்காடு போலீசார், அயனம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சந்தேகப்படும் படி அவ்வழியாக ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர்.
விசாரணையில், நொளம்பூரைச் சேர்ந்த சாரதி, 21 ; அருள் குமார், 55 ; நரேஷ் குமார், 35 மற்றும் அயனம்பாக்கத்தைச் சேர்ந்த ராவணன், 30 ; ஆகியோர் மாடு திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
அவர்கள், திருவேற்காடு சுற்றுவட்டாரத்தில், சாலையில் சுற்றித்திரிந்த 10 மாடுகளை திருடி கறிக்கு விற்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார், நான்கு பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். மாடு திருட பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
***