/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வட்டிக்கு வீட்டை பறிக்க முயன்ற மூதாட்டி கைது; மகளுக்கு வலை வட்டிக்கு வீட்டை பறிக்க முயன்ற மூதாட்டி கைது; மகளுக்கு வலை
வட்டிக்கு வீட்டை பறிக்க முயன்ற மூதாட்டி கைது; மகளுக்கு வலை
வட்டிக்கு வீட்டை பறிக்க முயன்ற மூதாட்டி கைது; மகளுக்கு வலை
வட்டிக்கு வீட்டை பறிக்க முயன்ற மூதாட்டி கைது; மகளுக்கு வலை
ADDED : மார் 23, 2025 12:37 AM

அமைந்தகரை,
அமைந்தகரை, சான்றோர்பாளையம் பகுதியை சேர்நதவர் ராஜலட்சுமி, 37. இவரது தம்பி சதீஷ்குமாருக்கு விபத்து ஏற்பட்டது.
தம்பியின் மருத்துவ சிகிச்சைக்காக, 2023 மார்ச் மாதம், அரும்பாக்கத்தில் உள்ள லதா, 58, என்பவரிடம். 13 லட்சம் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். அதற்காக, மாதம் 78,000 ரூபாய் வட்டி கட்டி வந்துள்ளார்.
சில மாதங்களாக, சரிவர வட்டி கட்டாததால், லதா மற்றும் அவரது மகள் ஸ்ரீவித்யா இருவரும் சேர்ந்து, ராஜலட்சுமி வீட்டிற்கு சென்று தகராறு செய்து, 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக, கட்டாயப்படுத்தி எழுதி வாங்கினர்.
கடந்த 12ம் தேதி, மீண்டும் வீட்டிற்கு சென்ற இருவரும், ராஜலட்சுமி மற்றும் அவரின் தாயை சரமாரியாக தாக்கி, வீட்டை எழுதி தரும்படி மிரட்டினர்.
இதுகுறித்து, ராஜலட்சுமி அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, அதிக வட்டி கேட்டு மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, அரும்பாக்கம், ஆபிசர்ஸ் காலனியை சேர்ந்த லதாவை கைது செய்தனர்.
விசாரணையில், லதா மீது, ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உட்பட இரண்டு வழக்குகள் இருப்பது தெரிந்தது.
லதாவை சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக உள்ள மகள் ஸ்ரீவித்யாவை தேடி வருகின்றனர்.