ADDED : மார் 23, 2025 12:36 AM
சென்னை,சென்ட்ரல் ரயில் நிலையத்தின், 12வது நடைமேடையில், மின்சார ரயிலில் செல்வதற்காக, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள், நேற்று முன்தினம் மதியம், நின்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, மாநில கல்லுாரியைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு வந்துள்ளனர். திடீரென, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், ஒருவரையொருவர் கத்தி மற்றும் கற்கள் கொண்டனர். இதனால், பயணியர் அச்சமடைந்தனர். ரயில்வே போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை விரட்டி பிடித்தனர்.
மாநில கல்லுாரியைச் சேர்ந்த மாணவர்களான, சாம்சன், 19, ரகுபதி, 19, ஜனா, 19, துளசிராமன், 19, கணேஷ்குமார், 18, ஆகாஷ், 21, லோகேஷ், 19, மணிகண்டன், 19, மற்றும் ஐந்து சிறார்கள் என 13 பேர் பிடிபட்டனர்.
அதேபோல் பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களான, சத்யா, 20, ஜனார்த்தனன், 19, ஆகியோரும் பிடிபட்டனர்.
ரூட் தல விவகாரம் தொடர்பாக, ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, 15 பேரையும், நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.